கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். “பாக்ஸ் ஆபிஸ் கிங்” மட்டுமல்ல “சோசியல் மீடியாவுக்கும் கிங்” என்பதையும் அவ்வப்போது விஜய் நிரூபித்து வருகிறார். விஜய் படம் பற்றி எந்த ஒரு சின்ன தகவல் கசிந்தாலும் அதற்கென தனி ஹேஷ்டேக்கை கிரியேட் செய்து தளபதி ரசிகர்கள் ட்விட்டரை தாறுமாறாக தெறிக்க வைத்துவிடுகின்றனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படதின் ரிலீசுக்கு ரசிகர்கள் அனைவரும் காத்து கிடக்கின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். லாக்டவுன் முடிந்ததும் மறுகணமே விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய், மாஸ்டர் படக்குழுவினருடன் ஆன்லைன் காலில் பேசிய வீடியோ வைரலானது. 

அதேபோல் கடந்த வாரம் நண்பர்களுடன் விஜய் மாஸ்க் அணிந்து கொண்டு சுற்றும் புகைப்படம் வெளியாகி வைரலானது.தற்போது நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தனது ப்ரெண்ட்ஸ் உடன் விஜய் வீடியோ கால் பேசிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.