பீஸ்ட் (Beast) படத்தின் முதல் பாடலை அனிருத் இசையில் விஜய் (vijay) பாடி உள்ளதாகவும், சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) இப்பாடல் வரிகளை எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தொடங்கி, பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பதோடு மட்டுமின்றி எஸ்.கே.புரடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். இதுதவிர பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குறிப்பாக இவர் எழுதும் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே கோலமாவு கோகிலா, கனா, டாக்டர் போன்ற படங்களுக்காக சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் வைரல் ஹிட்டான நிலையில், தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்திற்கும் அவர் பாடல் எழுதி உள்ளாராம்.

இப்பாடலை வருகிற ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். டாக்டர் படத்திற்காக அனிருத் மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்குனர் நெல்சன் கலகலப்பான கலந்துரையாடல் மூலம் ஒவ்வொரு பாடலுக்கான அறிவிப்பையும் வெளியிட்டனர். இது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்நிலையில், தற்போது உருவாகி வரும் பீஸ்ட் படத்திற்கும் அதே பார்முலாவை பின்பற்ற இயக்குனர் நெல்சன் முடிவு செய்துள்ளாராம். அதன்படி பீஸ்ட் படத்தின் முதல் பாடலை அனிருத் இசையில் விஜய் பாடி உள்ளதாகவும், சிவகார்த்திகேயன் இப்பாடல் வரிகளை எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இப்பாடலை தான் வருகிற ஜனவரி 1-ந் தேதி வெளியிட உள்ளார்களாம். இதற்கான அறிவிப்பு வீடியோவில் விஜய்யுடன் அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் நடிகர் விஜய்யும், சிவகார்த்திகேயனும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.