தமிழுக்கு 80 கோடி, தெலுங்கு மார்க்கெட்டிக்கு 40 கோடி என மொத்தம் 120 கோடி ரூபாய் சம்பளத்துக்கு இந்தப்படத்தில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறப்பட்டது. 

தமிழ் திரையுலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். தர்பார் படத்திற்காக ரஜினிகாந்த் கடைசியாக வாங்கிய சம்பளம் 108 கோடி எனக்கூறப்படுகிறது. இதனிடையே தான் புதிதாக கமிட்டாகியுள்ள படத்திற்காக தளபதி விஜய் 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு 80 கோடி வரை சம்பளம் தரப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. 

விஜய் 66 படத்தை இயக்க உள்ள இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும், மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இது பைலிங்குவல் படம் என்பதால் தமிழுக்கு 80 கோடி, தெலுங்கு மார்க்கெட்டிக்கு 40 கோடி என மொத்தம் 120 கோடி ரூபாய் சம்பளத்துக்கு இந்தப்படத்தில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கோலிவுட் வட்டாரத்திலோ விஜய்க்கே 120 கோடி ரூபாய் கொடுத்தால், மொத்த படத்தை என்ன 300 கோடி பட்ஜெட்டிலா எடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஆனால் உண்மை என்னவென்றால் விஜய்க்கு 120 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதுக்கு பதிலாக மாஸ்டர் பட ஷூட்டிங்கின் போது விஜய் வீட்டில் ரெய்டு நடந்ததைப் போலவே மீண்டும் ஒரு வருமான வரிச்சோதனைக்கு தனக்கு வேண்டாத நபர்கள் திட்டமிடுகிறார்களோ? என்ற கலக்கத்தில் தளபதி விஜய் இருப்பதாக தகவல்.