Breaking: வயநாடு நிலச்சரிவு விஷயம் என்னை சோகத்தில் ஆழ்த்தியது.! கனத்த இதயத்தோடு தளபதி விஜய் போட்ட பதிவு!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதை கேள்விப்பட்ட தளபதி விஜய் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் நிலச்சரிவு இந்தியாவையே பரபரப்பாக்கி உள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில், மற்றொருபுறம் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த மக்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு மக்களை மீட்க போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் ஒருபுறம் மக்களை மீட்க போராடி வருவது போல், தன்னார்வலர்களும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க போராடி வருகின்றனர்.
சீதையாக நடித்த நடிகை கிருத்தி சனோனா இப்படி? சிக்கிய வீடியோ.. குவியும் கண்டனம்!
மேலும் பிரதமர் மோடி, வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடாகவும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் இழப்பீடாகவும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதே போல் ராகுல் காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த எதிர்பாராத இயற்கை பேரழிவு குறித்து, தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி வருவதோடு... உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இன்று ஒரு படத்திற்கு 25 கோடி வாங்கினாலும் அந்த சந்தோசம் கிடைக்கல! முதல் சம்பளம் குறித்து பேசிய நானி!
கேரளாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டிருக்கும் நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான தளபதி விஜய்... சமூக வலைதளத்தில் தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டு இரங்கல்களையும் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், "வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சோகமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். எனது எண்ணமும் பிரார்த்தனைகளும், துயரம் அடைந்த குடும்பத்தினருடன் தான் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.