*  தனுஷை வைத்து அடிக்கடி ‘ஜாதி’ பஞ்சாயத்துகள் எழும்பி அடங்குவது வழக்கம். அதிலும் அசுரன் படத்தில் அவர் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்த நபராக நடித்ததில் இருந்து ஒரு சாரார் மட்டும் அவரை போற்றுவதும், இன்னொரு தரப்பு தூற்றுவதுமாக இருந்தனர். இந்நிலையில் இப்போது ‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜின் இரண்டவது படமான ‘கர்ணன்’ படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதுவும் தலித்  கதை பேசும் படமாம். நெல்லை வட்டாரத்தில் நடந்த தலித் - உயர் இன சாதி மோதல் கதை இது என்கிறார்கள். எனவே தனுஷுக்கு  வரவேற்பும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது.
(படத்த படமா மட்டும் பாருங்க மக்கா)

*   கமல்ஹாசனின் அண்ணனான நடிகர் சாருஹாசனின் 90வது பிறந்தநாளை நேற்று அவரது குடும்பத்தினர் ஏக கலகலப்பாக கொண்டாடினர். இதில் தம்பி கமல்ஹாசனும் கலந்து கொண்டாட். கத்தையான தாடி, லுஸ் சட்டை, வற்றிய உடம்பு, வாடிய முகம் என்று காணப்பட்டார் கமல். ஆனால் குணா படத்தில் வரும் ‘பார்த்தவிழி’ பாடலை அவர் பாடி  தன் குடும்பத்தினரை உற்சாகப்படுத்திய வீடியோ காட்சி வைரலாகிறது. அனுஹாசனும், ஸ்ருதிஹாசனும் அதை ரசித்து தலையாட்டுகின்றனர் வீட்டில். 
(தலைவன் பாடுகிறான்)

*   பாகுபலி 2 வில் குண்டு அனுஷ்காவை ஒல்லியாக காட்டிட, தயாரிப்பு தரப்பை சில கோடிகளை  செலவு செய்ய வைத்தார் ராஜமவுலி. இப்போது இதே நிலைமை அனுஷ் நடித்திருக்கும் ‘சைலன்ஸ்’ படத்தின் தயாரிப்பு தரப்புக்கும் உருவாகியுள்ளது. இஞ்சி இடுப்பழகி அனுஷே கொஞ்சிக் கேட்டிருப்பதால் தயாரிப்பு தரப்பு எந்த யோசனையுமில்லாமல் களமிறங்கிவிட்டது. 
(தேவசேனை சொன்னா அப்பீல் ஏது?)

*   கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலந்து கட்டி கலர்ஃபுல்தனம் காட்டி வந்தவர் தமன்னா. ஆனால் யாரோ சிலர் ‘தமன்னாவுக்கு வயசாகிவிட்டதால் மாப்பிள்ளை பார்க்கிறது குடும்பம்’ என கொளுத்திப் போட, டோட்டலாக அவருக்கான ஆஃபர் சரிந்துவிட்டது. இதனால் பொண்ணு இப்போது வெப்சீரிஸில் நடிக்க முடிவெடுத்துள்ளதாம். 
(மில்க் ப்யூட்டி எந்த ஸ்கிரீன்ல இருந்தாலும் அசத்தல்தான்)


*   மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யின் மாஸ் லுக் வெளியாகி அவரது ரசிகர்களை அசரடித்துள்ளது. இந்த நிலையில் இப்படமானது ‘சைலன்ஸ்டு’ எனும் கொரியன் முவியின் தழுவல் கதை எனும் தகவல் அதைவிட வைரலாகியுள்ளது. இதனால் விஜய்யை ’வழக்கமா அட்லீ திருடுன பழைய தமிழ் ஹிட்  கதையில நடிப்பாரு. இந்த வாட்டி ஒரு மாற்றத்துக்கு லோகேஷ் காப்பியடிச்ச கொரியன் கதையில் நடிக்குறார்டோய்’ என்று இணையதளங்களில் வெச்சு செய்ய துவங்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள். இதனால் செம அப்செட்டில் இருக்கிறார் விஜய். 
(விடுங்க தளபதி, இவய்ங்க எப்பவுமே இப்படித்தான்)