2020ம் ஆண்டு விரைவில் முடியப்போகிறது, கொரோனாவின் தாக்கமும் குறைந்து வருவதால் புத்தாண்டில் நல்ல படியாக அடியெடுத்து வைக்க வேண்டுமென மக்கள் காத்துக்கிடக்கின்றன. 2020ம் ஆண்டில் பல்வேறு அதிரடியான சமாச்சாரங்கள் அரங்கேறியது. அதில் முக்கியமானது தளபதி விஜய் வீட்டில் நடைபெற்ற ரெய்டு. காரணம் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே வந்த போலீசார் விஜய்யை விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணையும், அவருடைய வீடுகளில் விடிய விடிய சோதனையும் நடைபெற்றது. 

அரசியல் காரணமாகவே விஜய் மீது ரெய்டு விவகாரத்தை கட்டவிழ்த்து விட்டதாக தகவல் பரவ, நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜய்யைக் காண கூடியதை அடுத்து, பேருந்தின் மீதேறிய விஜய் அவர்களுடன் நின்று ஒட்டுமொத்த கூட்டத்தையும் கவர் செய்யும் படி செல்ஃபி ஒன்றை எடுத்துக்கொண்டார். 

 

அதனை விஜய் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட, தாறுமாறு வைரலான அந்த செல்ஃபி ஏகப்பட்ட சாதனைகளையும் படைத்து வந்தது. அன்று விஜய் எடுத்த அந்த செல்ஃபி தான் இப்போது 2020ம் ஆண்டில் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்ற பெருமையை பெற்றுள்ளது. மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை அறிவித்து கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி போட்ட ட்வீட் தான் இந்த ஆண்டு அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.