ஸ்கீரினில் தான் விஜய்யை பார்க்க முடியவில்லை, போஸ்டரிலாவது பார்க்க முடிந்ததே என்று மகிழ்ச்சியில் இருந்தனர். 

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் தயாரான மாஸ்டர் படம் இன்று வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் உலகம் முழுவதையும் ஆட்டிவைக்கும் கொரோனா வைரஸ் தளபதி படத்தையும் விட்டு வைக்கவில்லை. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஷூட்டிங் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது, தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 

அதனால் திட்டமிட்டபடி மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யாமல் மாஸ்டர் படக்குழு தத்தளித்து வருகிறது. சொன்ன தேதிக்கு படம் ரிலீஸ் ஆகாததால் தளபதி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அவர்களை குஷியாக்கும் விதமாக மாஸ்டர் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் "ஊரடங்கு உங்களது உத்வேகத்தை இழக்கச் செய்யக்கூடாது. மாஸ்டர் விரைவில் உங்களைச் சந்திப்பார்" என்று குறிப்பிட்டிருந்தது. 

ஸ்கீரினில் தான் விஜய்யை பார்க்க முடியவில்லை, போஸ்டரிலாவது பார்க்க முடிந்ததே என்று மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் மாஸ்டர் போஸ்டரில் விஜய் கொடுத்துள்ள போஸ் குறித்து தல, தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் கட்டிப்புரண்டு வருகின்றனர். அதாவது அஜித் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான என்னை அறிந்தால் படத்திலிருந்து போஸ்டருக்கான ஐடியாவை சுட்டதாக தல ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர். 

Scroll to load tweet…

ஏற்கனவே இதே படத்தில் இருந்து தான் முதல் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதாகவும் அஜித் ரசிகர்கள் சர்ச்சையை கிளப்பினர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் தல, தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் அடிக்கும் கூத்தை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.