அண்மையில் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே சமயம் அந்த ட்ரைலரில் இடம் பெற்ற ஒரு கெட்ட வார்த்தை தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் இரண்டாவது முறையாக நடிக்கும் லியோ திரைப்பட தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்டோபர் 18ஆம் தேதியே பல இடங்களில் பிரத்யக காட்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்று கருதப்படும் லியோ திரைப்பட ட்ரெய்லர் தற்பொழுது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பல அரசியல் பிரபலங்களும், திரைத்துறை பிரபலங்களும் தளபதி விஜய், அவதூறான வார்த்தை பேசியதற்கு கடும் கண்டனத்தை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் குடந்தையில் செய்தியாளர்களை சந்தித்த மூத்த தமிழ் திரையுலக நடிகை கஸ்தூரி அவர்கள், லியோ திரைப்படத்தில் வரும் கெட்ட வார்த்தை குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில்.. "இதற்கு முன்னதாக தமிழ் திரை உலகில் பல படங்களில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இது புதிது அல்ல. இருப்பினும் சிறு சிறு படங்களில், முகம் தெரியாத நடிகர்கள் நடிக்கும் படங்களில் வரும் கெட்ட வார்த்தையும், அதே வார்த்தையை தளபதி விஜய் போன்ற ஆளுமை மிக்க நடிகர் ஒருவர் பேசுவதிலும் வித்தியாசம் உள்ளது". 

"இது கண்டிக்கத்தக்கது, ஆனால் ட்ரெய்லரில் இடம்பெற்ற அந்த வார்த்தைக்கு முழு பொறுப்பையும் லோகேஷ் கனகராஜ் ஏற்றுள்ளார். ஆகவே இது இயக்குனரின் தோல்வி என்று தான் கூறவேண்டும்" என்று தெரிவித்துள்ளார். கஸ்தூரி உள்பட ஒரு சில திரைக்கலைஞர்களும், பல அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் ஒருநாள் சம்பளம் கூட தரவில்லை.. லலித் சார் எங்கே..? தொடரும் லியோ பட டான்சர்களின் ஊதிய பிரச்சனை!