கடந்த சில வருடங்களாக கொடிய எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை ஒருவருக்கு, விஜய் ரசிகர்கள் இணைந்து உதவி செய்துள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய்.  உலகம் முழுவதும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.  அதிலும் பெண் ரசிகைகள் இவருக்கு அதிகம்.

விஜய்யின் ரசிகர்களை பொறுத்தவை, தளபதியின் படத்தை பார்க்க எப்படி போட்டி போடுகிறார்களா அதே போல் மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே ரசிகர் மன்றம் சார்பாக ஓடி போய் பல உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரியில் உள்ள விஜய் ரசிகை ஒருவர் "ஆஸ்டியோபோரோசிஸ்" என்கிற கொடிய எலும்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயால் தாக்கினால், பாதிக்கப்பட்டவரின் எலும்பு மிகவும் பலவீனமாக மாறி பின் நொறுங்க ஆரம்பிக்கும். சிகிச்சைக்கும் பணம் அதிகம் செலவாகும். 

இந்நிலையில் சிகிச்சைக்கு பணம் இன்றி தவித்து வந்த அந்த ரசிகைக்கு உதவும் நோக்கத்தோடு கிருஷ்ணகிரியில் உள்ள விஜய் ரசிகர்கள் ஒன்றிணைந்து "விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கம்" சார்பாக ரூபாய் 25 ஆயிரம் பணத்தை மருத்துவ உதவிக்கு கொடுத்துள்ளனர். 

இது குறித்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது இதைப்பார்க்கும் பல விஜய் ரசிகர்களை பாராட்டி வருவதோடு தொடர்ந்து இந்த நோயால் பாதிக்கப்பட்ட ரசிகைக்கு உதவும் நோக்கில் தங்களால் முடிந்த உதவியை பாதிக்கப்பட்ட ரசிகைக்கு செய்து வருகிறார்கள்.