பீஸ்ட் படம் குறித்த அப்டேட்டுகளை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கசிந்துள்ள தகவல் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில், ஈசிஆரை தொடர்ந்து சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டூடியோவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பீஸ்ட் படம் குறித்த அப்டேட்டுகளை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கசிந்துள்ள தகவல் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தளபதி 65 என தலைப்பிடப்படாமல் இருந்த படத்திற்கு பீஸ்ட் என கடந்த மாதம் பெயர் சூட்டப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாளில் இருந்தே “அது என்ன உங்க விஜய் தமிழில் படத்துக்கு தலைப்பு வைக்க மாட்டாரா?... எங்க தல பாருடா வலிமைன்னு அழகா தமிழில் பெயர் வச்சியிருக்காரு” என அஜித் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திமுக ஆட்சியில், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் எடுக்கும் படத்திற்கு இப்படியொரு தலைப்பா என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை. 

இந்நிலையில் தான் பீஸ்ட் என்ற தலைப்பை மாற்றிவிடலாமா? என்ற ஆலோசனையில் படக்குழு இருப்பதாக செய்தி. காரணம் விமர்சனங்கள் மட்டும் கிடையாதாம். தமிழக அரசு விரைவில், தமிழ் திரைப்படங்களுக்கான 8 சதவீத வரியை தள்ளுபடி செய்ய உள்ளதாம். தமிழில் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மட்டுமே இந்த வரிச்சலுகை வழங்கப்படும் என்றும் நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாம். எனவே படத்தின் தலைப்பை தமிழில் மாற்றிவிடலாமா? என படக்குழு யோசித்து வருகிறார்களாம்.