Asianet News TamilAsianet News Tamil

விஜய்யுடன் ரொமான்ஸ் பண்ணப்போவது யார்?.... ‘தளபதி 66’ பட வாய்ப்பை தட்டித்தூக்க காத்திருக்கும் 3 ஹீரோயின்கள்

‘தளபதி 66’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்த அறிவிப்பை வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Thalapathy 66 movie heroine update
Author
Tamil Nadu, First Published Jan 30, 2022, 2:37 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் (vijay). இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் (Beast) படம் தயாராகி உள்ளது. நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் நடிக்க அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கிவர் ஆவார். மேலும் இப்படத்தை டோலிவுட்டை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

Thalapathy 66 movie heroine update

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்த அறிவிப்பை வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதன்படி இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா, ராஷி கண்ணா, கியாரா அத்வானி ஆகிய 3 நடிகைகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம்.

இவர்கள் மூவரில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அந்த மிகப்பெரிய வாய்ப்பை தட்டித்தூக்கப்போவது யார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த மூவருமே இதுவரை விஜய்யுடன் நடித்ததில்லை. வருகிற மார்ச் மாதம் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios