Asianet News TamilAsianet News Tamil

டெல்லி காற்று மாசு - சிக்கித்தவிக்கும் தளபதி-64 படக்குழு...! ஷுட்டிங்கில் விஜய்யுடன் இணைந்த முக்கிய பிரபலம்...!

 'பிகில்' படத்தின் அசுரத்தனமான வெற்றிக்குப் பிறகு, 'தளபதி' விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் 'தளபதி-64'. இந்தப் படத்தில், விஜய்க்கு வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி நடிக்கிறார். 

thalapathy 64 shooting cancel
Author
Delhi, First Published Nov 6, 2019, 10:57 PM IST

ஹீரோயினாக 'பேட்ட' புகழ் மாளவிகா மோகனன் கமிட்டாகியுள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, 'ராக் ஸ்டார்' அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வழக்கமான விஜய் படங்களில் இருந்து விலகி, வித்தியாசமான கதைக்களத்துடன் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வருகிறார். 


'தளபதி-64' படத்தின் முதற்கட்ட ஷுட்டிங் முடிந்த நிலையில், 2-வது கட்ட ஷுட்டிங், கடந்த நவம்பர் 1ம் தேதி டெல்லியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள பிரபல கல்லூரிகள் மற்றும் நொய்டாவில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் படத்தின் ஷுட்டிங்கை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். 40 நாட்கள் நடைபெறும் இந்த ஷெட்யூலில், விஜய் மற்றும் விஜய்சேதுபதி பங்கேற்கும் சண்டைக் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளன.

சமீபத்தில், ஒரு கல்லூரியில் விஜய்யின் ஓபனிங் பாடலை மிகபிரம்மாண்டமாக படக்குழுவினர் படமாக்கி வந்தனர். இதனிடையே, டெல்லியில் ஏற்பட்டுள்ள கடும் காற்று மாசு காரணமாக, அங்கு மோசமான சூழல் நிலவி வருகிறது. 

அங்குள்ள மக்கள் சுவாசிக்கவே சிரமப்பட்டு, பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதில், தளபதி-64 படக்குழுவும் விதிவிலக்கல்ல. கடும் காற்று மாசு காரணமாக, வெளிப்புறங்களில் படப்பிடிப்பை நடத்த முடியாமல் படக்குழுவினர் சிக்கித்தவித்து வருகின்றனர். 

thalapathy 64 shooting cancel

இதனால், இண்டோரிலேயே படப்பிடிப்பை படப்பிடிப்பை நடத்திவரும் நிலையில், ஹீரோயின் மாளவிகா மோகனன் இன்று படக்குழுவுடன் இணைந்துள்ளார். அவர் பங்கேற்கும் 2-வது கட்ட படப்பிடிப்பு இதுவாகும். தொடர்ந்து, விஜய் - மாளவிகா நடிக்கும் காட்சிகளை படக்குழு படமாக்க திட்டமிட்டுள்ளதாம். 

thalapathy 64 shooting cancel
எனினும், டெல்லியில் நிலவும் மோசமான சூழலால், தளபதி-64 படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்ட நாட்களுக்கு நடத்திய முடிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios