அட்லீ - விஜய் கூட்டணியில் திரைக்கு வந்த "பிகில்" திரைப்படம் அடுத்தடுத்து சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது "கைதி" பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 64" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். 

சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலேஜ் புரொபசராக விஜய் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே டெல்லியில் உள்ள பிரபல கல்லூரிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லீக் ஆகி வைரலாகின. மேலும் படத்திற்கு ”சம்பவம்” என தலைப்பு வைக்க உள்ளதாகவும், அதே வார்த்தையில் ஆரம்பிக்க உள்ள மாஸ் ஓப்பனிங் சாங் ஒன்றை விஜய் பாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாள்தோறும் "தளபதி 64" படத்தின் அப்டேட்டிற்காக காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு பக்கா மாஸான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 


தளபதி விஜய் படத்தில் பாடல், நடனத்திற்கு பிறகு அதிக முக்கியத்துவம் பிடிப்பது சண்டை காட்சிகள். அனல் பறக்கும் சண்டை காட்சியில் விஜய், வில்லன்களை பந்தாடும் போது தியேட்டர்களில் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கும். எனவே "தளபதி 64" படத்திலும் ஸ்டென்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் மாஸ்டர் ஸ்டென்ட் செல்வா, மாஸ் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருவதாகவும், தளபதி 64 படத்தில் விஜய்யின் பைட் சீக்குவன்ஸ்களில் தீப்பொறி பறக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.