thalapathy 62 movie poja put vijay

 மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இளைய தளபதி விஜய் அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று 'தளபதி 62' படத்தின் பூஜையுடன் கூடிய படபிடிப்பு தொடங்கியதாக ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தில் விஜய் கிளாப் அடிப்பது போல் உள்ளது. மேலும் இன்று முதல் படபிடிப்பு தளபதியால் துவக்கம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே விஜய் ரசிகர்கள் 'தளபதி 62' படத்தின் துவக்கவிழா போஸ்டரை விஜய் ரசிகர்கள் தயார் செய்து சுவற்றி ஒட்டவே துவங்கி விட்டனர். அதிலும் மூன்று விதமாக இந்த போஸ்டரை தயார் செய்துள்ளனர் வடசென்னை மாவட்ட விஜய் ரசிகர்கள்.