தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இன்னும் பெயரிடப்படாத 64 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் உள்ள சிவமோஹாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதியுடன், விஜய் மோதும் சண்டை காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நடிகை மாளவிகா மோகன் இந்த படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், அண்ரிட்ரியா, சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை விஜயின் உறவினர் ஜேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் அடுத்த படத்திற்கு தற்போது விஜய் மெல்ல மெல்ல தயாராகி வருகிறாராம்.  

விஜய்யின் 65 ஆவது படம் குறித்து, இதுவரை வெளியாகியுள்ள தகவலின்படி வெற்றிமாறன் மற்றும் மகிழ்திருமேனி ஆகியோர் விஜய்க்காக கதைகளை தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.  வெற்றிமாறன் இயக்கத்தில் தான் விஜய் நடிக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக பரவலாக ஒரு தகவல் பரவி வருகிறது.

தன்னுடைய 65 ஆவது படம் குறித்த தகவலை பொங்கல் திருவிழா விருந்தாக விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு கூற உள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.