இந்த தீபாவளிக்கு பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ‘தளபதி 63’படத்தின் சாடிலைட் உரிமை இன்னும் போனியாகாமல் இருப்பதாகவும் அஜீத் படத்தின் அதேவிலையைச் சொல்வதால் தொலைக்காட்சி நிறுவனங்கள் தயங்குவதாகவும் தகவல்.

ரஜினி கமல் விஜய் அஜீத் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் ஓடி சம்பாதிப்பதைவிட தொலைக்காட்சி மற்றும் இணைய உரிமைகளில் அதிகம் சம்பாதிக்கின்றன. இதனாலேயே அந்த நடிகர்கள் அதிகச் சம்பளம் கேட்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.இந்த முன்னணி நடிகர்கள் அனைவருமே தங்கள் பத்தின் தொலைக்காட்சி உரிமை என்ன விலைக்குப்போகிறதோ அதையே சம்பளமாகக் கேட்பதாகவும் கூட சொல்லப்படுகிறது.

இப்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்ற பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டனவாம்.ஆனால் இதுவரை எந்தத் தொலைக்காட்சியும் உரிமையைப் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக ஐம்பது கோடி கேட்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். இது அஜீத் படத்தின் விலை நிலவரம்.இதனால் அதிர்ச்சி அடைந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் பின்வாங்கியதால் இதுவரை வியாபாரம் நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.