மறைந்த முன்னாள் முதலமைச்சர், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தலைவி பட நாயகி கங்கனா ரணாவத் அரவிந்த் சாமியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுத்துள்ள திரைப்படம் 'தலைவி'. இந்த படத்தில் பாலிவுட் பட நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'தாம் தூம்' படத்தில் நடித்த கங்கனா, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இந்த படத்தில் மூலம் தமிழ் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

அரவிந்த் சாமி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்த சில புகைப்படங்கள் வெளியாகியது. இதில் அச்சு அசல் எம்.ஜி.ஆர் போலவே அரவிந்த் சாமி இருப்பதாக பல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது.

இந்நிலையில் இன்று புரட்சி தலைவர், எம்.ஜி.ஆர் அவர்களின் 104 ஆவது நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த நாளை மேலும் சிறப்பாகும் விதத்தில், 'தலைவி' பாடத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ள நடிகை கங்கனா ரணாவத் அரவிந்த் சாமியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.