இயக்குநரின் அனுமதியின்றி ‘தலைவி’பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஜீ.வி.பிரகாஷ்குமார்...
கங்கனா ரனாவத்,அர்விந்தசாமி நடிக்கும் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’படப் பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இப்படத்தில் ஜெயலலிதா பாத்திரத்துக்கு கங்கனா பொருத்தமாக இருப்பாரா என்ற சந்தேகத்தை மக்கள் தொடர்ந்து எழுப்பி வந்த நிலையில் அதற்காக கங்கனா மெனக்கெடும் வீடியோக்களும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டன.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா பாத்திரத்தில் நடிக்கும் ‘தலைவி’படத் தோற்றத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பியிருக்கிறார் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ்குமார். இப்படத்தை வெளியிட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் அனுமதியை பெற்றாரா என்பது தெரியவில்லை.
கங்கனா ரனாவத்,அர்விந்தசாமி நடிக்கும் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’படப் பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இப்படத்தில் ஜெயலலிதா பாத்திரத்துக்கு கங்கனா பொருத்தமாக இருப்பாரா என்ற சந்தேகத்தை மக்கள் தொடர்ந்து எழுப்பி வந்த நிலையில் அதற்காக கங்கனா மெனக்கெடும் வீடியோக்களும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டன.
இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷ் குமார் சில நிமிடங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவின் கட் அவுட்டாக வைக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விரைவில் சில பாடல்களுடன் சந்திப்போம் என்று பதிவிட்டுள்ளார். இந்த டிசைனை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட படக்குழு உத்தேசித்திருக்கும் நிலையில் அவசரப்பட்டு ஜீ.வி. அதை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த போஸ்டரைப் பார்க்கும்போது ஜெயலலிதாவின் தோற்றத்துக்குக் கொஞ்சம் பக்கத்தில் கங்கனா வந்திருப்பதாகவே தெரிகிறது.