பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத். தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாரா எப்படி தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வரும் படங்களில் நடித்து, தன்னுடைய நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறாரோ, அதே போல் கங்கனா மிகவும் அர்ப்பணிப்போடு ஒவ்வொரு படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு, ஜனவரி மாதம் சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து வெளியான மணிகர்ணிகா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து, தற்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் 'தலைவி' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், இளம் வயது ஜெயலலிதா, மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா என இரு மாறு பட்ட வேடங்களில் கங்கனா நடித்த காட்சிகள் இடம்பெற்றுள்ள.

இந்த படத்திற்காக, பரதநாட்டியம் மற்றும் ஜெயலலிதாவின் பல்வேறு படங்களை பார்த்து அவரை மாதிரியே மாற பயிற்சி எடுத்து வந்த கங்கானாவை பார்க்க ரசிகர்கள் ஏகப்பட்ட ஆர்வம் காட்டிய நிலையில், இப்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை என்றே கூறலாம்.

ஏற்கனவே, ஜெயலலிதாவின் வேடத்திற்கு கங்கனா சற்றும் செட் ஆக மாட்டார் என்கிற கருத்தே பரவலாக இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள போஸ்டரை பார்த்து மீண்டும் இதே கருத்தை தான் சமூக வலைத்தளத்தில் ஆணித்தனமாக முன்வைத்து மீம்ஸ் போட்டு கதறவிட்டு வருகிறார்கள்.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் வீடியோ இதோ...