Asianet News TamilAsianet News Tamil

கங்கனா நடித்துள்ள 'தலைவி' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வெளியான தகவல்..!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வெளியாக வேண்டிய நிலையில், கொரோனா இரண்டாவது அலை தலைதூக்கியதால் படக்குழு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும், ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது. தாற்போது திரையரங்குகள் தமிழகத்தில் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

thalaivi movie expecting release date viral in internet
Author
Chennai, First Published Aug 23, 2021, 6:36 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வெளியாக வேண்டிய நிலையில், கொரோனா இரண்டாவது அலை தலைதூக்கியதால் படக்குழு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும், ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது. தாற்போது திரையரங்குகள் தமிழகத்தில் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

thalaivi movie expecting release date viral in internet

மறைந்த பழம்பெரும் நடிகையும், தமிழக அரசியல் களத்தில் சிங்க பெண்ணாக ஆட்சி செய்த, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'தலைவி'. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் படமாக்க போட்டி போட்ட நிலையில், முதலில் படத்தை இயக்கி ரிலீஸ் செய்யவுள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். ஏற்கனவே... 'குயின்' என்ற பேரில் ஜெயலலிதாவின், வாழ்க்கை வெப் சீரிஸாக எடுக்கப்பட்டதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

thalaivi movie expecting release date viral in internet

ஆனால் இந்த படத்தில், ஜெயலலிதாவின் குழந்தை பருவம், இளமை காலம், மற்றும் முதலமைச்சராக வந்தது என, அவரை பற்றி பலரும் அறிந்திடாத சில அறிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளதால் இப்படத்தை, திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என படக்குழுவினர் உறுதியாக இருந்தனர். திரையரங்கில் வெளியான பின்னர் ஓடிடியில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

thalaivi movie expecting release date viral in internet

ஏப்ரல் மாதமே வெளியாகவேண்டிய இப்படத்தை, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அப்போது அனுமதி கொடுக்கப்பட்டதாலும், கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வந்தததால், திரையரங்குகள் மூடும் சூழ்நிலை நிலவி வந்ததாலும் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. சுமார் நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளதை தொடர்ந்து, தாற்போது 'தலைவி' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை இதுகுறித்து பட தரப்பு எந்த தகவலையும் வெளியிடவில்லை.

thalaivi movie expecting release date viral in internet

தாற்போது வெளியாகியுள்ள தகவலின் படி... தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் 'தலைவி' திரைப்படத்தை, செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுற்குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று, விஜய் சேதுபதியின் 'லாபம், விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்’', உள்பட சில படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகிறதாம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios