இதில் விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு 'தலைவி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
 இந்தப் படத்தில், ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். 

கடந்த 2008ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்திற்குப் பிறகு, கங்கனா நடிக்கும் 2-வது தமிழ்படம் இதுவாகும். இந்தப் படத்தில், அரவிந்த்சாமி, மதுபாலா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். 'ஹங்கர் கேம்ஸ்', 'கேப்டன் மார்வல்', 'ப்ளேட் ரன்னர் 2049' உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ், இதில் கங்கனாவின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார். 


சுமார் 2 ஆண்டுகளாக ஜெயலலிதா தொடர்பான புத்தகங்களை படித்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் விஜய். பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலியின் அப்பாவும், பாகுபலி படத்தின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத், 'தலைவி' படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளா். 

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்கிறார். 
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு, கடந்த நவம்பர் 10ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், 'தலைவி' படத்திற்காக அரவிந்த்சாமி வைத்திருக்கும் லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. க்ளீன் ஷேவ் செய்து ஸ்மார்ட் லுக்கில் அரவிந்த்சாமி இருக்கும் இந்த புகைப்படம், ரசிகர்களின் லைக்சை அள்ளி வருகிறது.


பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு,இந்தி மொழிகளில் உருவாக்கப்படும் 'தலைவி' படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.