இந்த வருட தலை தீபாவளியை மத்தாப்பு முகத்தோடு வரவேற்க தயாராகி விட்டனர், கோலிவுட்டில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள்.

இவர்கள் இருவருமே தங்கள் படைப்புகளை வெளிட்ட பின் தான், தங்கள் காதல் மனைவியை கைபிடித்தனர்.

அதில் ஒருவர் , டைம் மெஷின்னை மையமாக வைத்து சயின்ஸ் பிக்க்ஷன் கதையில் உருவான '24' படத்தின் இயக்குனர் விக்ரம் குமார்.

இதில் சூர்யாவை இது வரை நாம் பார்க்காத தோற்றத்தில் தோன்ற வைத்து வியக்க வைத்தார்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த பிரமாண்ட படைப்பை நாம் கண்களுக்கு விருந்தாக்கிய விக்ரம் குமாரின் தலை தீபாவளி இந்த வருடம் தான்.

அதே போல மிக எதார்த்தமான உண்மைகளை உரைக்க சொன்ன இயக்குனர், ராஜ் முருகன். இவரின் முதல் படமான கூக்கு வித்தியாசமான காதல் படமாக மக்கள் மனதில் இடம் பிடித்தது.

சமீபத்தில் வெளியான ஜோக்கர் படம், அணைத்து தரப்பு மக்களால் மட்டும் இல்லாமல், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவர் மனதிலும் நல்ல இடத்தை பிடித்தது.

முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து தன்னுடைய வாழ்த்துக்களையும் ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய காதலி ஹேமாவை கரம் பிடித்தார் ராஜ் முருகன்.

இந்த இரு இயக்குனர்களுக்கும், உங்கள் சார்பாகவும் எங்கள் சார்பாகவும் தலை தீபாவளி வாழ்த்துக்கள்.