Thala Thonis career in the field of cinema The hero is Producer!
சினிமாவில் ஒரு துறையில் இருந்து கொண்டே மற்ற துறையிலும் வேலை செய்வது இப்போது சாதாரணம். ஒரு துறை கைவிட்டாலும், இன்னொரு துறை கைக்கொடுக்கும் என்பது தான் உள்குத்து.
தற்போது கிரிக்கெட்டில் கொடிகட்டி பறக்கும் வீரர்களில் ஒருவர் தோனி.
கிரிக்கெட்டில் தல என்று அன்போடு அழைப்படுபவர். மொத்த இந்திய கிரிக்கெட்டும் தோனியை, சுய விளம்பரத்திற்காக தவறாக விமர்சித்தாலும், ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட்டார் என்பதில் ஐயமில்லை.
ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்தின் வாழ்க்கை வரலாற்று படமாகிறது.
இந்த படம் மூலம் சினிமா துறையில் தயாரிப்பாளராக கால் பதிக்கிறார்.
ரோஹித் வைத் இயக்க இருக்கும் இப்படத்தில் வருண் தவான், தியான் சந்தாக நடிக்க இருக்கிறார்.
கிரிக்கெட்டில் பறக்க விடும் தோனி, தற்போது சினிமாவில் நுழைந்து இங்கும் கொடிகட்ட பறக்க வேண்டும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
இந்த படத்தை தோனியுடன், கரன் ஜோஹரும் தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
