அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவேகம் படத்தில் படத்தின் டிரெய்லர், இன்று நள்ளிரவு 12:01க்கு  வெளியாகவிருக்கிறது. அஜீத், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அப்புக்குட்டி நடிப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் படம் விவேகம். ஏற்கனவே படத்தின் போஸ்டர்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கின்றன.

இந்நிலையில் விவேகம் படத்தின் டீசர் இன்று வெளியாகின்றன சுமார் 57 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசரை வரவேற்க ட்விட்டரை வழிமேல் விழிவைத்து ரசிகர்கள்காத்திருக்கின்றனர். இப்படத்தின் பாஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டான நிலையில் தற்போது டீசரும் வெளியாகவிருக்கிறது.

பிரமாண்டமாகவும், ஸ்டைலிஷாக உருவாகியிருக்கும் விவேகம் படத்தில் ஹாலிவுட் படங்களுக்கு இணையான சண்டை காட்சிகள்   குறைவில்லை என்பதும் படத்தில் அஜீத் பைக்குகளை ஓட்டியிருப்பதும், சிக்ஸ் பேக்குடன் வெறித்தனமாக அசுர பலத்துடன் கட்டையை தன தொழில் சுமப்பது என ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து அஜீத்துடன் 3 வது முறையாக சிறுத்தை சிவா இந்தப் படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு படங்களில் அஜித் ரசிகர்களுக்கு விருந்து வைத்த சிவா இப்படத்தை தெறிக்க விட்டிருப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.