Asianet News TamilAsianet News Tamil

"டேய் ட்ரைலர் செம சூப்பர் டா" விஜய் மற்றும் GOAT படக்குழுவிற்கு வாழ்த்து சொன்ன தல அஜித்!

Thala Ajith : தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.

thala ajith wished team goat and actor vijay for goat trailer ans
Author
First Published Aug 17, 2024, 10:57 PM IST | Last Updated Aug 17, 2024, 10:57 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் தான் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்". வருகின்ற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இன்று மாலை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 

மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், மோகன். ஜெய்ராம், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 

சீதாவுடனான திருமணம் - விவாகரத்து? சீரியல் நடிகர் சதீஷ் விளக்கம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏற்கனவே வெளியான தல அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தின் ஒரு சிறிய ரெஃபரன்ஸ் இந்த GOAT திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் தளபதி விஜயின் சூப்பர் ஹிட் வசனங்கள் பலவற்றையும் இந்த திரைப்படத்தில் வெங்கட் பிரபு பயன்படுத்தி அசத்தியுள்ளார். 

இந்த நிலையில் கோட் திரைப்பட ட்ரெய்லர் வெளியான பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெங்கட் பிரபுவிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் நிருபர் ஒருவர், காந்தி என்று பெயரை வைத்துக் கொண்டு இப்படி விஜயை சரக்கு அடிப்பது போல காட்டுவது முறையா? என்ற கேள்விக்கு, காந்தி என்று பெயர் வைத்தாலே அவர்கள் சரக்கு அடிக்கக்கூடாது என்று இல்லை, அவர் மகாத்மா, அவரையும் ஒரு தனி மனிதரையும் கம்பேர் செய்து பேசுவது எந்த விதத்திலும் நியாயம் அல்ல என்று பதில் கூறினார். 

அதன்பிறகு தொடர்ந்து பேசிய அவர், நான் GOAT பட டிரைலரை ஏற்கனவே தல அஜித் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன் என்றும், அதை பார்த்த தல அஜித் "டே சூப்பர் டா, தளபதி விஜய்க்கும் படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து விடு" என்று அவர் கூறியதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார். 

ஆஸ்கார் மட்டுமல்ல, தேசிய விருதிலும் நான் தான் கிங்! அதிக தேசிய விருதுகளை அறுவடை செய்த ஒற்றை தமிழன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios