தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகர், நடிகைகள் தங்களுடன் நடித்தவர்களையே காதலித்து வாழ்க்கை துணையாக கைபிடித்துள்ளனர். எத்தனையோ பேர் அப்படி செய்திருந்தாலும் இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மனதில் முதலிடத்தில் இருப்பது அஜித் - ஷாலினி ஜோடி தான். 

அமர்களம் படத்தின் போது பற்றிக்கொண்ட காதல், இருவருக்கும் இடையே இன்றளவும் கொளுந்து விட்டு எரிந்துக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான அஜித், எவ்வளவு பிசியாக இருந்தாலும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நேரம் ஒதுக்குவதே அதற்கு சாட்சி. 

நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த காதல் தம்பதி குறித்த ருசிகரமான தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது 21  வருடங்களுக்கு முன்பே தல அஜித்திடம் ஷாலினி சத்தியம் ஒன்றை வாங்கியுள்ளாராம். திருமணத்திற்கு பிறகு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க கூடாது... எவ்வளவு பிசியாக நடித்தாலும் மாதத்தில் 15 நாட்கள் ஷூட்டிற்கு, 15 நாட்கள் குடும்பத்திற்கு என்று ஒதுக்க வேண்டும்... என்பது தான் அது. 

அதை இன்றளவும் கடைபிடித்து வரும் தல அஜித், சமீபத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வலிமை பட ஷூட்டிங்கில் இருந்து கிளம்பி வந்தார். அதே போல் மகன், மகளின் பள்ளி விழாக்கள் அனைத்திலும் தவறாமல் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.