சமீபத்தில் குட்டி தல ஆத்விக் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜாலியாக புன்னைக்கும் குட்டி தலயின் அழகை பார்த்து அசத்து போன ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்கும் அஜித். தங்களது மீது விழுந்த ஸ்பார்ட் லைட் வெளிச்சம், குழந்தைகள் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனாலும் விமான நிலையத்தில், அம்மாவுடன் ஷாப்பிங் செல்லும் போது, பொதுவெளியில் விளையாடிய போது என தல அஜித் செல்லகுட்டிகளின் புகைப்படங்கள் ஏதாவது ஒருவகையில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி விடுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 மகன், மகள் விவகாரத்தில் என்னதான் கண்டிப்பு காட்டினாலும், தன்னுடன் செல்ஃபி கேட்கும் ரசிகர்களை என்றுமே அஜித் விலக்கியது இல்லை, சந்தோஷமாக நின்று போஸ் கொடுத்துவிட்டுத் தான் செல்வார். ஆனால் அஜித்தின் குழந்தைகள் போட்டோவை சோசியல் மீடியாவில் பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.தோனி மகள் ஷிவாவைப் போல, நம்ம தல அஜித்தின் செல்ல மகன் ஆத்விக்கிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. மிகவும் எளிமையான மனிதரான அஜித் மீது அவரது ரசிகர்கள் எவ்வளவு பாசம் வைத்துள்ளார்களே, அதே அளவிற்கு மகன், மகள் மீதும் பாசம் வைத்துள்ளனர்.

சமீபத்தில் குட்டி தல ஆத்விக் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜாலியாக புன்னகைக்கு குட்டி தலயின் அழகை பார்த்து அசத்து போன ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.