Thala Ajith Risk for his Vivegam
அஜித் என்றாலே கடுமையான உழைப்பாளி என்று நாம் அறிந்த விஷயமே அதுவும் அவருக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டால் அதில் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்துவார்.
விவேகம் படத்தில் அப்படி பல விஷயம் பிடித்ததால் இந்த படத்துக்காக கொஞ்சம் ஸ்பெஷல் உழைப்பு, காரணம் பிடித்த இயக்குனர் இதுவரை வராத கதை, பிடித்த கதாபாத்திரம் இப்படி பல விஷயங்கள் இந்த படத்தில் இருப்பதால் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கும் படம் விவேகம்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விவேகம்’ விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வருடம் தனது 46 வது பிறந்த நாளை படக்குழுவினரோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அஜித். மே 10ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இறுதிகட்ட பணிகளை முடித்து ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
இப்படத்தில் பணியாற்றி வருபவர்களிடம் பேசிய போது, “அஜித் அதிகமாக தேதிகள் ஒதுக்கியது "விவேகம்" படத்துக்காகத் தான் இருக்கும். கதையைக் கேட்டவுடன் பிடித்துவிடவே, அந்த கதாபாத்திரத்திற்காக சுமார் 20 கிலோ வரை குறைத்து, உடம்பை மிகவும் சிலிம்மாக மாற்றிவிட்டார்.
70% படப்பிடிப்பு வெளிநாட்டில் தான் என்றாலும், மிகவும் கடுமையாக இருந்தது. கடுமையான குளிரில் மொத்த குழுவுமே பணிபுரிந்துள்ளோம்.
இன்டர்போல் அதிகாரியாக அஜித் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவின் மிக முக்கியமான நாடுகளில் நடைபெற்றுள்ளது. படத்தில் 6 பாடல்கள். ஒவ்வொன்றாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்கள்.
