தல அஜீத் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் ரிலீசாக இருப்பதால் இந்த முறை பொங்கல் தான் தல ரசிகர்களுக்கு தீபாவளி. இதனால் விஸ்வாசம் படத்தை சிறப்பான முறையில் கொண்டாட தல ரசிகர்கள் இப்போதே தயராகிவருகின்றனர். 

தல அஜீத் என்றாலே எளிமை தான். திரையுலகில் எந்த வித பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியதால் இவருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் திரைத்துறையிலும் அதற்கு அப்பாற்பட்டும் இருக்கின்றனர். என்ன தான் மிகப்பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் தனக்கு இருந்தாலும் அவர்களை தன் சுயநலத்திற்காக ஒரு போதும் பயன்படுத்திக்கொள்ளாத நேர்மையான மனிதர் அஜீத். தனக்கு என ரசிகர் மன்றம் கூட வைத்துக்கொள்ள விரும்பாத எளிமை விரும்பியான இவர், ஏற்கனவே ரசிகர்கள் உருவாக்கிய ரசிகர் மன்றத்தை கூட கலைத்துவிட்டார். 

இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை பார்த்து பல அரசியல் கட்சிகள் இவரை தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்ள முயன்ற போதும் கூட, எங்கேயும் சிக்காமல் தன் பாதையில் போய்க்கொண்டிருப்பவர் அஜீத். அரசியல் மட்டும் தான் மக்களுக்கு நல்லது செய்வதற்கான வழி என்றில்லை. நல்லது செய்ய நினைப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்வார்கள் அதற்கு அஜீத் ரசிகர்கள் தான் சிறந்த உதாரணம். அஜீத்தின் பெயரால் அவரது ரசிகர்கள் பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். 

அஜீத்தின் பெயரால் இவர்கள் செய்து வரும் நற்செயல்களை பார்த்த நடிகர் விவேக் மற்றும் அருண் பாரதி போன்றோர். நீங்கள் செய்யும் இந்த செயல்களால் அஜீத்துக்கும் பெருமை. அவர் ரசிகரான உங்களுக்கும் பெருமை என்று பாராட்டி இருக்கின்றனர். இதனை அஜீத் ரசிகர் பின்வருமாறு தனது டிவிட்டர் பதிவில் சந்தோசமாக தெரிவித்திருக்கிறார்”இந்த நிகழ்வில் நாணும் ஒருவனாக இருந்ததற்கு பெருமை படுகிறேன் #Thala ரசிகன் என்று சொல்வதற்கு …இது போன்ற பல நல்ல செயல்களை நாமே முன் வந்து செய்தால் போதும் நாடும் மக்களும் நல்லா இருக்க … வாழ்த்து தெரிவித்த@Actor_Vivek சார் மற்றும் @ArunbharathiA அண்ணா அவர்களுக்கு நன்றிகள் பல”