Asianet News TamilAsianet News Tamil

​மாஸ்கோவில் மாஸ் காட்டும் தல அஜித்... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!

தற்போது அஜித் மாஸ்கோவில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் இந்தியர்கள் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

Thala ajith latest photo on Moscow going viral
Author
Chennai, First Published Sep 8, 2021, 9:47 PM IST

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த, 'நேர்கொண்ட பார்வை' படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், இந்த படத்தை தொடர்ந்து இவர் அஜித்துடன் இணைந்துள்ள இரண்டாவது படமான 'வலிமை' குறித்து, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, அதாவது கடைசியாக எடுக்க உள்ள சண்டை காட்சி ஒன்றை மட்டும் படக்குழு, வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக, அந்த குறிப்பிட்ட சண்டை கட்சியை எடுப்பது தாமதமாகிக்கொண்டே சென்றது. 

Thala ajith latest photo on Moscow going viral

இந்நிலையில் படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றனர். அங்கு பிரம்மாண் டமான சேஸிங் காட்சியை 10 நாட்கள் படக்குழு படமாக்கியது. அதை முடித்துவிட்டு அனைவரும் திரும்பிய நிலையில், நடிகர் அஜித்குமார் மட்டும் இன்னும் ரஷ்யாவிலேயே தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

Thala ajith latest photo on Moscow going viral

ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்த அஜித், அந்த நாட்டில்  சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர்  பைக் பயணம் செய்துள்ளார். ரஷ்யாவில் உள்ள பைக்கர்ஸ் உடன் தல அஜித் செய்த சாகச பயணத்தின் போட்டோஸ் தாறுமாறு வைரலானது. 

Thala ajith latest photo on Moscow going viral

தற்போது அஜித் மாஸ்கோவில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் இந்தியர்கள் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios