Thala Ajith is ready to come up with politics with development projects in Tamil Nadu
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டங்களுடன் அரசியலுக்கு வர தல அஜித் தயார் நிலையில் இருக்கிறார் என்று விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி தெரிவித்தார்.
மகாலிங்கம் இயக்கத்தில் ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விசிறி’.
இதில் ரிமோனா ஸ்டெப்னி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழக பாஜக மாநிலத் துணை தலைவர் பி.டி.அரசகுமார், பாடலாசிரியர் மதன்கார்க்கி, நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகர் ஆரி பேசியது: "விசிறி திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது.
தமிழக அரசியலில் நடிகர் அஜித் பெயரை நாம் இன்னும் சேர்க்கவில்லை. அவரது அரசியல் வருகைக்கு முன்பு, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுடன் தயார் நிலையில் உள்ளார். என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு, தமிழகத்தை எவ்வாறெல்லாம் மேம்பாடு அடையச் செய்யலாம் என்றும் ஆலோசித்து வருகிறார் என்று தனக்கு தகவல் கிடைத்துள்ளது" என்று நடிகர் ஆரி கூறினார்.
