Thala Ajith is miss the success story ...
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சதுரங்கவேட்டை-2 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு கிடைக்காததால் அந்தப் படம் அரவிந்தசாமிக்கு சென்றுவிட்டது.
நடிகர் கார்த்தி நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்தப் படத்தில் கார்த்தி வித்தியாசமான காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார்.
இதுகுறித்து கார்த்திக் கூட ஒரு பேட்டியில் மற்ற போலீஸ் போல "கத்தி, சத்தம் போட்டு பேசுற போல இந்தப் படம் இருக்காது" என்று சிங்கம் படத்தையும், சிறுத்தை படத்தையும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இயக்குனர் வினோத் ஒரு பேட்டியில் ‘சதுரங்க வேட்டை’ படத்தை பற்றி பேசினார். அதில், 'சதுரங்க வேட்டை 2-ஆம் பாகத்தில் நடிக்க அஜீத்திடம் கேட்கப்பட்டதா என்று கேட்டதற்கு, இயக்குனர் வினோத் ஆமாம் உண்மைதான். அஜீத்திடம் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தில் நடிக்க கேட்டிருக்கிறோம். அப்படி மட்டும் நடந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்தப் படத்தில் தற்போது அரவிந்த்சாமி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
