இமேஜை அடித்து நொறுக்க வரும் சிம்பு ...

ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் ஓரணியில் நின்று அதிசயித்துக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் இயக்குகிற ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முதல் ஷெட்யூலை மளமளவென முடித்துக் கொடுத்துவிட்டார் சிம்பு. காட்டுத் தீயாக செய்தி பரவ… நாலாபுறத்திலிருந்தும் ‘நான்… நீ’ என்று சிம்பு வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஸ்டிரைக் காரணமாக ஓய்வில் இருக்கும் மற்ற மற்ற ஹீரோக்கள் கதை கேட்கிறார்களோ, இல்லையோ? சிம்பு கேட்க ஆரம்பித்திருக்கிறார்.  ஒரு சில காட்சிகளுக்காக வெளிநாடு சென்றுவிட்டு திரும்பினால் படம் ஓவர். அதற்கப்புறம் சிம்புவின் திட்டம் என்ன?

ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கப் போகிறார் சிம்பு. இசை யுவன்சங்கர்ராஜா. மொத்தம் முப்பதே நாட்களில் படத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்புவதாக ஷெட்யூல் வகுத்திருக்கிறார். தன்னை பற்றிய இமேஜை அடித்து நொறுக்குவதுதான் அவரது பெரும் லட்சியமாக இருக்கிறதாம்.

அப்படி செய்கிறவர்கள் என் ரசிகர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள் – தல தாறுமாறு அட்வைஸ்...

தலன்னா யாருன்னு கோலிவுட் முதல் பாலிவுட் வரை எல்லோருக்குமே தெரியும். அப்படி தெரிந்தவர்கள் எல்லோருமே தலபுராணம் பாடாமல் இருப்பதில்லை. எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார் அஜித். அந்த வகையில் அஜித் எப்போதாவது தான் பேட்டி என்று கொடுப்பார். “பில்லா” படத்திற்காக ஒரு பேட்டி கொடுத்தார். இதற்குப் பின் இவர் எந்த ஒரு பேட்டியும் கொடுப்பது இல்லை, தன் வேலை நடிப்பது, அதை மட்டும் பார்க்கின்றேன் என இருந்துவிட்டார்.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் அஜித் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார், அதில் மற்ற நடிகர் ரசிகர்களுடன் உங்கள் ரசிகர்கள் சண்டைப்போடுகிறார்களே என்று கேட்டனர். அதற்கு அஜித் ‘என் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு மற்ற நடிகர்களை கிண்டல் செய்வதோ, மோசமாக விமர்சிப்பதோ செய்யாதீர்கள், அவர்கள் ரசிகர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள்’ என்று கூறியுள்ளார்.