Asianet News TamilAsianet News Tamil

சோனி லிவ் OTT தளத்தில் 'தேன்'... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

தற்போது சோனி லிவ் OTT தளத்தில், சமூகத்தின் யதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்ற கதையான விருது பெற்ற திரைப்படமான ‘தேன் ’ 25 ஜூன் அன்று வெளியாக இருக்கிறது.

Thaen  an award winning film streaming on 25th June on SonyLIV
Author
Chennai, First Published Jun 19, 2021, 2:37 PM IST

இந்திய கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் தொடர்புடைய கதைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பது தான் சோனி லிவ்வின் தலையாய முயற்சியாகும். இந்தியாவில் முதல் வீடியோ ஆன்  டிமாண்ட் (VOD) சேவையை மல்டி ஸ்கிரீனில் வழங்கிய பெருமை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்சின் சோனி லிவை சேரும். சோனி லிவ் சந்தாதாரர்கள் உலகெங்கிலும் உள்ள முக்கிய விளையாட்டு நிகழ்வுகள், சமீபத்திய ஹாலிவுட் படங்கள், ஒரிஜினல்கள், 18,000+ மணிநேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், லைவ் டிவி மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பிரத்யேகமாக கண்டு ரசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 

இதன் தொடர்ச்சியாக தற்போது சோனி லிவ் OTT தளத்தில், சமூகத்தின் யதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்ற கதையான விருது பெற்ற திரைப்படமான ‘தேன் ’ 25 ஜூன் அன்று வெளியாக இருக்கிறது.  ஒரு இளம், கிராமப்புற மற்றும் படிக்காத தேனீ வளர்ப்பவரின் பயணத்தை இந்த படம் காட்டுகிறது. அவர் தனது மனைவியை ஒரு அரிய நோயிலிருந்து காப்பாற்ற பல சவால்களை எதிர்த்துப் போராடுகிறார்.

Thaen  an award winning film streaming on 25th June on SonyLIV

வேலு (தருண் குமார்) மற்றும் பூங்கோடி (அபர்நதி) ஆகியோரின் வாழ்க்கையை சுற்றி அமைந்தது தான் தேன் படத்தின் மைய கதை. துரதிர்ஷ்டவசமாக பூங்கோடி நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடுகிறார். குடியுரிமையை நிரூபிப்பதற்கான சரியான ஆவணங்கள் இல்லாததால் பூங்கோடிக்கு மருத்துவ உதவியைப் பெற வேலு போராடுகிறார். அதிகாரத்துவ சிக்கல்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாமை ஆகியவை, சமூகத்தின் யதார்த்தத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. கணேஷ் விநாயகன் இந்த படத்தை இயக்கி உள்ளார். அம்பலவாணன் பி, பிரேமா. பி & ஏபி புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

பல்வேறு திரைப்பட விழாக்களில் ’தேன்’ திர்ரையிடப்பட்டு 40-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளது.இந்தியன் பனோரமா 2020-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்றாகும். 11-வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா, டெல்லி என்.சி.ஆர், இந்தியா, கல்ட் கிரிட்டிக் திரைப்பட விருதுகள் 2020, புது தில்லி திரைப்பட விழா, அயோத்தி திரைப்பட விழா, அயோத்தி 2020 போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

Thaen  an award winning film streaming on 25th June on SonyLIV

இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் சமூக செய்தி பார்வையாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகிறது. இப்படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகன் கூறியதாவது: “படிக்காத ஒரு மனிதன், அவனுடைய உரிமைகளுக்காகப் போராடுகிறான். இதுதான் இன்று பலரின் யதார்த்தம. இந்தப் போராட்ட கதையை தான் 'தேன்' முன்னிலைப்படுத்துகிறது. இந்த படம் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது, இன்றைய காலத்திற்கு இது பொருத்தமானது என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios