காமெடி நடிகர் தாடி பாலாஜி, மகள் போஷிகாவை பார்க்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.

விஜய், அஜித் என பலமுன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி.பட வாய்ப்புகள் குறைந்ததால், தற்போது ஒரேயடியாக சின்னத்திரை பக்கம் ஒதுங்கிவிட்டார். பிரபல தனியார் தொலைக்காட்சியில், தொகுப்பாளராகவும், காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் கலக்கி வருகிறார்.

ரசிகர்கள் அனைவராலும் சிறந்த ஜோடிகளாக அறியப்பட்ட தாடி பாலாஜியும், அவருடைய மனைவியும், கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமாற்றி வருகிறார்கள்.

மேலும் தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நித்தியா, நீதி மனறத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தாடி பாலாஜி தன்னுடைய மகள் போஷிகாவை பார்க்க அனுமதியளிக்குமாறு, நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம், தாடி பாலாஜி அவருடைய மகள் போஷிகாவை வாரத்தில் ஒருநாள் சந்தித்து பேசலாம் என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதுகுறித்து தாடி பாலாஜி கூறுகியில், "நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் நியாயம் கிடைத்துள்ளது, வாரம் ஒரு முறை என் தாய் வீட்டில் மாலை 3:00 முதல் 4:00 மணி வரை என் மகளை பார்க்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அவளின் படிப்பு செலவு மொத்தத்தையும் நான் ஏற்று கொள்கிறேன். தன்னுடைய மகளின் மீது நான் வைத்துள்ள அன்பை பயன்படுத்தி கொண்டு நித்யா தன்னுடைய வாழ்க்கையில் விளையாடி வருவதாக கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, நித்யாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என தாடி பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சமாதான படுத்தினாலும்... மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை வெடித்து அது காவல் நிலையும் வரை வந்தது குறிப்பிடத்தக்கது.