thadibalaji about wife nithiya ilicit love

பல வருடங்களாக, காதல் ஜோடியை போல் தன்னுடைய மனைவியுடன் சுற்றித் திரிந்தவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி. இவர்களுக்கு பௌஷிகா என்கிற 5 வயது மகளும் உள்ளார். திருமணம் ஆனதில் இருந்து இவர்கள் இருவரும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும், தொலைகாட்சி போட்டிகளிலும் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை சிறிதாக ஆரம்பித்த பிரச்சனை பெரிதாக வெடித்து விவாகரத்து வரை சென்றுவிட்டது.

நித்தியா கூறிய காரணம்:

ஏற்கனவே முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து பின்பு தான் நித்தியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் தாடி பாலாஜி. இந்நிலையில் கடந்த ஆண்டு நித்தியா, கணவர் தாடி பாலாஜி தன் மீது சந்தேகப்படுவதாகவும், தன்னையும் மகள் பௌஷிக்காவையும் கொலைசெய்ய பார்த்தார் என ஒரு வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டார்.

இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் பாலாஜி மகள் முன்பு அசிங்கமாக ஒரு காரியத்தை செய்வது போலவும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

தாடி பாலாஜி கூறியது:

ஆரம்பத்தில் தாடி பாலாஜி இது குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்தாலும் பின் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளதாக கூறினார். இவர் இப்படி கூறியதை தொடர்ந்து நித்தியா தன்மீது தவறு இல்லை என்று நிரூபிக்கும் விதத்தில் அனைத்து மீடியாக்களையும் சந்தித்து தாடி பாலாஜி மீது பல்வேறு புகார்களை அடுக்கினார்.

மீண்டும் சர்ச்சை:

ஏற்கனவே வெடித்த பிரச்னையை, ஒரு வழியாக போலீசார் தலையிட்டு தீர்த்து வைத்த நிலையில். தற்போது தாடி பாலாஜி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாடி பாலாஜி பேட்டி:

தற்போது இவர் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் என் மனைவி நித்தியா மீது நான் அதிக காதல் வைத்தது தான் பிரச்சனைக்கு காரணம். அவர் கல்யாணத்திற்குப் பிறகும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று அவருக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தேன். ஆனால் அதை அவர் தவறாக பயன்படுத்தி இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாற்றிவிட்டார்.

தகாத உறவில் நித்தியா:

தன்னுடைய மனைவி நித்தியாவிற்கும் ஜிம் ட்ரைனர் பாசில் என்பவருக்கும் தவறான தொடர்பு உள்ளது. அதை நான் நிறைய முறை கண்டித்துள்ளேன். அதற்கான ஆதாரமும் தன்னிடம் நிறைய உள்ளது என்றும் பல சம்பவங்களும் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் பாசிலின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.