thadam movie important updathion

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "குற்றம் 23" திரைப்படத்தை தொடர்ந்து, ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது "தடம்" எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், "தடம்" படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியில் உருவான "தடையறத்தாக்க" பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் "தடம்" படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது.

படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது "தடம்" படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் "தடம்" தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.