தெலுங்கு திரையுலகை சேர்ந்த ஹீரோக்களில், கடந்த 2019 ஆம் ஆண்டில் ரசிகர்களை அதிகள் கவர்ந்த நடிகர்கள் யார் என்ற பட்டியலை ஆங்கில செய்தி நிறுவனம் ' Most Desirable Men 2019 ' என்கிற பெயரில் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், இரண்டு தோல்வி படங்களை கொடுத்தும், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டியர் காம்ரேட், மற்றும் அண்மையில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர், ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை என்றாலும், விஜய் தேவரகொண்டா, முதல் இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: சரிந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்த மாஸ்டர் பிளான் போட்ட எமி! கூச்சல் இல்லாமல் செய்த செயல்!
 

Most Desirable Men 2019 பட்டியலில், ராம் சரண் தேஜா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மூன்றாவது இடத்தில் ராம் பொதேனினி உள்ளார். நடிகர் பிரபாஸ் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பாகுபலி படத்திற்கு பின் முதல் மூன்று இடங்களில் இருந்த இவருக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் 10 இடங்களுக்குள் இருந்த பிரபல நடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யா, 11 வைத்து இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஜூனியர் NTR 19 வது இடத்திலும், நானி 27 வது இடத்தையும் பிடித்துள்ளனர். நடிகர் மகேஷ் பாபு இந்த பட்டியலில் இல்லாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் என்றும் கூறலாம்.

மேலும் செய்திகள்: நடிகர் ஷாருக்கான் மகளா இது? கவர்ச்சியிலும்... அழகிலும் டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் 19 வயது பைங்கிளி!
 

தற்போது வெளியாகியுள்ள பட்டியல் இதோ: