Asianet News TamilAsianet News Tamil

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்... நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி இதோ..!!

பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் திடீர் விபத்தில் சிக்கி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Telugu Actor sai Dharam tej meet with road accident cctv video here
Author
Chennai, First Published Sep 11, 2021, 10:47 AM IST

பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் திடீர் விபத்தில் சிக்கி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாய் தரம் தேஜ், பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவன் கல்யாணின் ஆகியோருக்கு நெருங்கிய உறவினரும் ஆவார். இவர் நேற்று இரவு, தன்னுடைய சொகுசு பைக்கில் ஹைதராபாத் சாலையில் சென்றுகொண்டிருந்த  போது, இவரை கடந்து சென்ற வெளிநாட்டு ஆடம்பர கார் ஒன்று எதிர்பாராத விதமாக இவரை உரசி விட்டு சென்றது. 

Telugu Actor sai Dharam tej meet with road accident cctv video here

இதன் காரணமாக தடுமாறி கீழே விழுந்த சாய் தரம் தேஜுக்கு, கை, இடுப்பு, முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும் இவர் தலைக்கவசம் அணிந்து இருந்ததால் தலையில் காயம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. உடனடியாக இவரை, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளித்த பின்னர், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துமனைக்கு மாற்றப்பட்டார்.

Telugu Actor sai Dharam tej meet with road accident cctv video here

இவரது விபத்து குறித்த தகவல் வெளியானதும், சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி, உறவினர்கள் பலர் தொடர்ந்து அப்பலோ மருத்துவமனைக்கு விரைந்து, இவரது உடல் நலம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் சாய் தரம் தேஜ் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவக்குழுவினர் இவரை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telugu Actor sai Dharam tej meet with road accident cctv video here

மேலும், சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி ஒன்றும் வெளியாகி, பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. அந்த காட்சிகள் இதோ...

Follow Us:
Download App:
  • android
  • ios