நடிகை தனுஸ்ரீ தத்தா விளம்பரத்திற்காகவோ, அந்த 3 நாட்கள் சமயத்திலோ, நடிகர் நானா படேகர் மீது குற்றஞ்சாட்டியிருக்கலாம் என்று, திரைப்படத்துறையினர் கூறியுள்ள சம்பவம், மேலும் சர்ச்சையைகிளப்பியுள்ளது.

2008ஆம் ஆண்டு ஹார்ந் ஓகே ப்ளீஸ் திரைப்படத்தில் நடித்தபோது, பிரபல நடிகர் நானா படேகர் தம்மை தேவைஇல்லாமல் பல இடங்களில் தொட்டு, பாலியல் ரீதியாக சீண்டியதாக நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, இந்தி திரைப்பட உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. தனுஸ்ரீ தத்தாவுக்கு தரவாக சில பிரபல நடிகைகள்கரம் கொடுத்த நிலையில், பெரும்பாலான நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் நானாபடேகருக்கே ஆதரவாக உள்ளனர்.

இந்த நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தா விவகாரம் தொடர்பாக, ஆங்கில் செய்திச் சேனல் ஒன்று நடத்திய ஸ்டிங்ஆபரேஷனில், திரைப்பட இயக்குநர் ராகேஷ் சரங், தயாரிப்பாளர் சமீ சித்திக் ஆகியோர் உளறிக் கொட்டியுள்ளனர். இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நடிகைதனுஸ்ரீ தத்தா மாதவிடாய் காலத்தில் இருந்தபோது, நடிகர் நானா படேகர் மீது, பாலியல் புகாரைகூறியிருக்கலாம் என்று தயாரிப்பாளர் சமீ சித்திக் மோசமாக விமர்சித்துள்ளார்.

நானா படேகர் மீது புகார் கூறி தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக, இந்த பொய்யானகுற்றச்சாட்டை நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியிருக்கலாம் என்று விமர்சித்த அவர், தற்போதெல்லாம் படுக்கையறைவீடியோ காட்சிகள் இணையதளத்தில் சர்வ சாதாரணமாக வெளிவந்து கொண்டிருக்கும் போது, இவையெல்லாம்விளம்பரத்திற்காகவே செய்யப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த காட்சிகள் அனைத்தும் ஆங்கில ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இந்தி திரைப்பட உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.