படப்பிடிப்பின் போது நடிகருக்கு உணர்ச்சி வருவதற்காக தனது உடைகளை கழட்டுமாறு இயக்குனர் கூறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.
   
பாடல் காட்சியை படமாக்கும் போது நடிகர் நானா படேகர் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதாகவும், தொடக் கூடாத இடங்களில் தொட்டதாகவும் கூறி நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பை ஏற்படுத்தினார். பிரபல நடிகரான நானா மீது தனுஸ்ரீ கூறிய பரபரப்பு தற்போது வரை ஓயவில்லை. இந்த நிலையில் பிரபல இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மீது புகார் கூறியுள்ளார் தனுஸ்ரீ.
   
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தனுஸ்ரீயிடம், சினிமாத்துறையில் நானா படேகரை தவிர வேறு யாரும் உங்களிடம் வரம்பு மீறியது இல்லையா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தனுஸ்ரீ, தான் திரையுலகிற்கு வந்த ஆண்டே மிகப்பெரிய பிரச்சனைகளை எல்லாம் சந்தித்ததாக கூறினார். சாக்லேட் எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாடலில் கவர்ச்சியாக ஆட வேண்டும்.


  
என்னுட பிரபல நடிகர் இர்பான் கான் மற்றும் சுனில் செட்டி ஆகியோரும் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். படப்பிடிப்பு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நடிகர் இர்பான் கான் என்னை பார்த்து உணர்ச்சிவசப்படுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட வேண்டும். அந்த காட்சியில் இர்பான் கானை க்ளோஸ் அப்பாக ஒளிப்பதிவாளர் பதிவு செய்ய வேண்டும்.
   
இந்த காட்சிக்கு நான் தேவையே இல்லை. ஆனால் திடீரென என்னை இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி அழைத்தார். இர்பான் கான் முன்னிலையில் ஆடைகளை கழட்டி செக்சியாக போஸ் கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். இதனை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  இர்பான் கானுக்கு க்ளோஸ் அப் காட்சி எடுக்க நான் ஏன் ஆடைகளை கழைய வேண்டும் என்று கேள்வி எழுப்பினேன்.

நீ ஆடைகளை களைந்து அவர் முன்னால் நின்றால் தான் அவருக்கு உணர்ச்சி வருவது போல் இயல்பாக இருக்கும் என்று இயக்குனர் கோபமாக கூறினார். ஆனால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது இர்பான் கான், இயக்குனரை சத்தம் போட்டார். நீ என்ன முட்டாளா? நான் பார்த்துக் கொள்கிறேன், தனுஸ்ரீ ஆடைகளை களைய வேண்டாம் என்று கூறினார். இதே போல் சுனில் செட்டியும் எனக்கு ஆதரவாக வந்தார்.
இது போல் சினிமாவில் ஜென்டில்மேன்களும் இருக்கிறார்கள் என்று தனுஸ்ரீ கூறியுள்ளார்.