Asianet News TamilAsianet News Tamil

அடேய்... தமிழ் இயக்குனர்களா இனி ஐஏஎஸ், ஐபிஎஸ் பின்புலத்தில் படம் எடுக்காதீங்கயா...!! ரஜினி படத்தால் கடுப்பான ஐஏஸ் அதிகாரி...!!

" ஐயா தமிழ் இயக்குனர்களே இனிமேல் ஐஏஎஸ் ஐபிஎஸ் பின்புலத்துடன் எந்த படமும் எடுக்காதீங்க என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

tamilnadu IAS officer alex pall mennan comment Tamil director's and rajini
Author
Chennai, First Published Jan 10, 2020, 5:20 PM IST

ஐயா தமிழ் இயக்குனர்களே இனிமேல் ஐஏஎஸ், ஐபிஎஸ் பின்புலத்தை வைத்து எந்தப் படமும் எடுக்காதீங்க என தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .  அலெக்ஸ் பால் மேனன் ஒரிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தபோது நக்சலைட்டுகளால்  கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் .  அப்போதிலிருந்தே மிகவும் பிரபலமான ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து வருகிறார் .  அவர் கடத்தப்பட்ட போது ஒட்டுமொத்த ஒரிசா மாநில பழங்குடியின மக்களும்  அவருக்கு ஆதரவாக நின்றனர் . 

tamilnadu IAS officer alex pall mennan comment Tamil director's and rajini

மிகவும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று பெயர் பெற்றவர் ஆவார் .  இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் திரைப்படம் வெளியாகியுள்ளது இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார் ,  சுனில் ஷெட்டி வில்லனாக நடித்துள்ளார் ,  இந்தப் படத்தில் மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினி நடித்திருக்கிறார் படத்திற்கு எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளன.   பலர் இப்படம் குறித்து விமர்சித்து வரும் நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார் . அதில் " ஐயா தமிழ் இயக்குனர்களே இனிமேல் ஐஏஎஸ் ஐபிஎஸ் பின்புலத்துடன் எந்த படமும் எடுக்காதீங்க என வேண்டுகோள் விடுத்துள்ளார். tamilnadu IAS officer alex pall mennan comment Tamil director's and rajini

இந்த லாஜிக் ஒட்டலை.  எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்கிறது  என பதிவிட்டுள்ளார். அதன் விவரம்... " ஐயா... டேய் தமிழ் இயக்குனர்களா  இனிமே இந்த ஐஏஎஸ் ஐபிஎஸ் பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா... உங்க லாஜிக் ஒட்டல எங்க மொத்த மூளையும் விழுந்து  கிடைக்கிறது என்பதுதான் அந்த பதிவு.  ஐபிஎஸ் அதிகாரி உடன் கூடிய பின்புலத்தில்  ரஜினி நடித்துள்ள நிலையில்  இதை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக ஐஏஎஸ் அதிகாரி பால் மேனன் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios