Asianet News TamilAsianet News Tamil

வலிமை ரிலீஸுக்கு முன்னதாக தமிழக அரசின் குட் நியூஸ்..என்ன தெரியுமா?

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.. வலிமை ரிலீஸ் அறிவிக்கப்படுள்ள நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..

tamilnadu government allow 100% audience in theaters ?
Author
Chennai, First Published Feb 12, 2022, 12:53 PM IST

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

tamilnadu government allow 100% audience in theaters ?

அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

அந்த வகையில், வலிமை படத்தை மதுரையில் உள்ள அனைத்து திரையரங்கிலும் திரையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை எந்த நடிகரின் படமும் இந்த மாதிரி வெளியிடப்பட்டது இல்லையாம். இதன்மூலம் அஜித்தின் வலிமை திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. இதுதவிர தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் 90 சதவீத திரையரங்குகளில் வலிமை தான் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

tamilnadu government allow 100% audience in theaters ?

இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது..இதன்  பொருட்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது..அந்த வகையில் இன்று ஊரடங்கு தளர்வுக குறித்த ஆலோசனையில் முதலமைச்சர் சுகாதாரத்துறையுடன் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.. இந்த கூட்டத்தில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.. இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Follow Us:
Download App:
  • android
  • ios