“எந்த துறையாக இருந்தாலும் ஆளப்போறவன் தமிழன் தான் என்பதை ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் கேட்டுக் கொண்டுள்ளார்.

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது.

இதில், பார்த்திபன், தனுஷ், காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின்போது இசை நிகழ்ச்சி நடத்திய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், “தன்னுடைய 25 ஆண்டுகளான சினிமா வாழ்க்கையில் இப்போதுள்ள ரசிகர்கள் புது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அதனால், தனக்கு வயது குறைவு.

ஆளப்போறான் தமிழன் என்பதை தளபதி ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அது சினிமா துறையாக இருந்தாலும் சரி, வேறு எந்த துறையாக இருந்தாலும் சரி.

மேலும், பெண்களை அன்பாக பார்க்க வேண்டும், அவர்களை மதிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.