நடிகர் விஜய் போலவே ‘சொல்றதை மட்டுமில்ல சொல்லாததையும் செய்கிற விஷக்கிருமிகள் தமிழ்ராக்கர்ஸ். அவர்களது நேற்றைய ட்விட்டர் பதிவு ஒன்றில், யார் மீது என்ன கோபமோ...நாளை தமிழ்ராக்கர்ஸில் ‘பிகில்’படம் டிஜிட்டல் பிரிண்டில் வெளியாகும் என்று பீதியைக் கிளப்பியுள்ளனர்.

தளபதி விஜயுடன் மூன்றாவது முறையாக அட்லி இணையும் படம் பிகில். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில், நயன்தாரா, கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் எக்மோர் ரயில்வே செட் அமைத்து தொடர்ந்து நடந்து வருகிறது.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பாடல் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் மீண்டும் ஒரு பரபரப்பை தமிழ் ராக்கர்ஸ் கிளப்பியுள்ளது.
தமிழ்ராக்கர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட்டை வெளியிட்டுள்ளது. அதில், நாளை பிகில் படம் நாளை தமிழ் ராக்கர்ஸில் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனைப்பார்த்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் இன்னும் முழுமையாக படப்பிடிப்பே முடிவடையாத ஒரு படத்தை தமிழ்ராக்கர்ஸ் எப்படி வெளியிடப்போகிறார்கள் என்பது பெருங்குழப்பமாக இருக்கிறது. ஒரு வேளை எடுத்து முடித்தவரை ‘பிகில்’படத்தை அவர்கள் வெளியிட்டுவிட்டால் தமிழ் இண்டஸ்ட்ரிக்கு ஒரு பெரிய பூட்டு வாங்கிப் போட்டுவிட்டு எல்லோரும் தங்கள் சொந்த ஊருக்குக் கிளம்பிப்போகவேண்டியதுதான்.