தன்னுடைய தயாரிக்க ஆளில்லை என்று போராடும் நடிகர்களுக்கு மத்தியில், தல'யின் நிலையை பார்த்தீங்கன்னா கொஞ்சம் காண்டாகத்தான் செய்யும், காரணம் இந்த காஸ்ட்லீ நாயகனை வைத்து படம் பண்ண தயாரிப்பாளர்கள் காத்துட்டு இருக்காங்களே...

சூப்பர்ஸ்டார், தளபதி என்று இரண்டு மாஸ் ஓப்பனிங் சிங்கங்கள் தமிழ் சினிமாவில் அண்டர்கிரவுண்டில் கிள்ளி ஆடினாலும், சிங்கிள் சிங்கமாக கூட இவர்களையெல்லாம் அடிச்சு தூக்கிவிட்டு அசத்தலாக மனாதடா கேம் ஆடி முதல் இடத்தில் வந்து நிற்கிறார் தல. அதிலும் விஸ்வாசம் வசூலில் சொல்லவே வேணாம், கலெக்ஷன் புலி ரஜினியை டப்பா டான்ஸ் ஆட விட்டார். மெகா பட்ஜெட் பேட்ட படம் முழுவதுமே மாஸ் கண்டன்ட் ரஜினி, விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன்,பாபி சிம்ஹா சசிகுமார் என நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், சிங்கிள் மேனாக ஸ்க்ரீனில் தெறிக்கவிட்டிருந்தார் அதாவது விஸ்வாசம் மூலம்  அவர் தொட்டிருக்கும் லெவலே வேறு. 

அந்தப் படத்தினை  தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கு கிடைத்த கலெக்‌ஷன், தமிழக காஸ்ட்லி தயாரிப்பாளர்கள் பலரை ஹார்ட் அட்டாக் வரழைத்ததென்றே சொல்லலாம் அந்த மாதிரி ஒரு அவ்வளவு பிக் ஸாரி பிக்கஸ்ட் கலெக்‌ஷன். 

அதனால் விஸ்வாசத்துக்கு அடுத்து தல-யை  தாங்கள் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க வைக்க கோடிகளுடன் அவர் வீட்டின் முன் காத்துக் கிடந்தனர் தமிழக தயாரிப்பாளர்கள். ஆனால் பயங்க ஸ்பீடாக பைபாஸில் வந்து தலயை பாக்கெட் பண்ணிவிட்டார் பாலிவுட் பவர்புல் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர். அதுவும் ஒரு படத்தில் மட்டுமா?, மனுஷன் வெறித்தனமான தல ரசிகரா இருப்பாப்ல போல தொடர்ந்து மூணு  படத்துக்கு அஜித்துடன் அக்ரீமெண்ட் போட்டுவிட்டாராம். 

ஒரு படம் ரிலீஸ் ஆயிடுச்சி... அந்த வகையில் குறைந்தது இன்னும் கிட்டத்தட்ட 2 வருஷத்துக்கு அஜித்தின் பக்கமே தமிழக தயாரிப்பாளர்களால் போனி இருப்பதால் போக முடியாது. இதில் காண்டான தமிழக தயாரிப்பாளர்கள், பானிபூரி தேசத்து போனிகபூருக்கு ரிவிட் வைக்க ஒரு சிண்டிகேட் போட்டனர். 

அதன்படியே ரிலீஸுக்கு ரெடியான சமயத்தில் தலயின் புதுப் படமான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தினை மிக குறைந்த விலையில் விநியோக உரிமை பேசினர். போனி கடுப்பாகிவிட்டார். எவ்வளவு முயன்றும் விலை ஏறவில்லை. ஆக்சுவலாக கடந்த 1-ம் தேதியன்றே ரிலீஸாகியிருக்க வேண்டும் இந்தப் படம். ஆனால் ஒரு வாரம் தள்ளிப்போக காரணமே இந்த வியாபார சிக்கல்தான். இந்த நிலையில் ஜெமினி சர்க்யூட் நிறுவனம் ஒருவழியாக இந்தப் படத்தின் விநியோகத்தை டன் செய்தது. 

இந்த குஷியில், அஜித்துடனான தங்களின் அடுத்த படமான ‘Ak - 60’ (அதாவது தலயின் 60 வது படம்_ ன் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் போனிகபூர். இதைப் பார்த்து பொங்கிவிட்டனர் தமிழக தயாரிப்பாளர்கள். எனவே மீண்டும் சிண்டிகேட்டை அமைத்துள்ளவர்கள் போனியை அஜித்திடமிருந்து விலகி ஓட வைப்பதற்கான அத்தனை முயற்சிகளிலும் இறங்கியுள்ளனர். அதிலும் அஜித்தை இந்தியில் நடிக்க வைக்க போனி முயற்சி எடுத்திருப்பதை அவர்களால் தாங்கிக்கவே முடியவில்லை. அவர் அங்கே போய்விட்டால் தயாரிப்பின் மூலம் கிடைக்கும் மாஸ் கலெக்‌ஷன் இல்லாமல் போயிடுமே. 

அதனால் ‘அஜித் தமிழை தாண்டி வெளியில் எங்கேயும் போயிட கூடாது. அதுக்கு என்னல்லாம் பண்ணனுமோ அதை நாம இனி பண்ணுவோம். இனியும் இந்திக்கார ப்ரொடியூஸர்ட்ட நாம தோத்துற கூடாது என்று சபதமே போட்டு, களத்தில் இறங்கி சம்பவம் பண்ண துவங்கிவிட்டனர்.