ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை பற்றி சமூக வலைத்தளத்தில், பல்வேறு சர்ச்சை தகவல்களை வெளியிட்டு தெலுங்கு திரையுலகையே அதிர்ச்சியாக்கியவர் நடிகை ஸ்ரீரெட்டி.  

இவரின் குற்ற சாட்டுகளால் தெலுங்கு திரையுலகமே அதிர்ந்து போய் உள்ளது என்றும் கூறலாம். குறிப்பாக இவரின் குற்றச்சாட்டுகளில் முன்னணி நடிகர்கள், மற்றும் இயக்குனர்களும் சிக்கியுள்ளனர். 

இவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதால், இவரை தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். மேலும் தற்போது எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல், அன்றாட செலவிற்கு கூட தான் கஷ்டப்பட்டு வருவதாக சமீபத்தில் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார். 

இந்நிலையில் அவர் கொடுத்துள்ள பேட்டியில் ஒன்றில், தனக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர் ஒருவரும் பாலியல் தொல்லை கொடுத்து தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

மேலும் அவரது பெயரை விரைவில் அறிவிப்பதாகவும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளதால், அந்த இயக்குனர் யாராக இருக்கும் என பலரும் யோசிக்க தொடங்கிவிட்டனர்.

மேலும் இதை தொடர்ந்து பேசியுள்ள ஸ்ரீரெட்டி, தமிழ் திரையுலகில் பெண்களுக்கு மதிப்பு கொடுத்து வருவதாகவும். விரைவில் தமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்றும், தமிழ் திரையுலகிற்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.