தயாரிப்பாளர் சங்கம் தீபாவளிக்கு ஒதுக்கிய தேதியில் ‘திமிறு புடிச்சவன்’ படத்தை ரிலீஸ் செய்யாமல், அடுத்தடுத்த படங்களின் ரிலீசுக்கு தொந்தரவாக இருந்ததால் இனி விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களுக்கு திரைத்துறையினர் யாரும் ஒத்துழைப்பு தரக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

மாதந்தோறும் எந்தெந்த படங்கள் என்னென்ன தேதிகளில் ரிலீஸாகவேண்டுமென்று தயாரிப்பாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு ஒன்று பட்டியல் வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டிலை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதிலும் குறிப்பாக மெகா பட்ஜெட் பார்ட்டிகள் விஷாலின் உத்தரவுகளை துச்சமென மதித்து செயல்பட்டுவந்தனர்.

ஏனெனில் இதுவரை தடையை மீறி படத்தை ரிலீஸ் செய்தவர்கள் மீது சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அது ஒரு கிராமப் பஞ்சாயத்தின் வருத்தமில்லா வாலிபர் சங்கம் ரேஞ்சுக்கே செயல்பட்டு வந்தது. அதிலும் சிம்பு போன்றவர்கள்  தடை விதிக்கும்முன்பே ‘எனக்கா ரெட்கார்டு, எடுத்துப்பாரு என் ரெகார்டு’ என்று எசப்பாட்டு பாடுமளவுக்கு இருக்கிறது சங்கத்தின் நிலைமை.

ஸோ இனியும் இந்நிலை நீடித்தால் தங்களை ஒரு பயபுள்ள மதிக்காது என்று முடிவெடுத்தோ என்னவோ விஜய் ஆண்டனிக்கு ஒரு ஆறுமாதமாவது ரெட் கார்டு போட்டே ஆகவேண்டுமென்று பிடிவாதமாக இருக்கிறதாம் தயாரிப்பாளர் சங்கம்.