தமிழ் திரையுலகில் தற்போது தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி இருக்கும் காமெடி  நடிகர்களில் சூரியும் ஒருவர். சமீபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி துயர சம்பவம் அனைத்து தமிழர்களையுமே மனதளவில் மிகுந்த வேதனை அடைய செய்திருக்கிறது.

நடிகர் சூரியும் கூட இந்த சம்பவத்தால் மிகவும் ஆத்திரமடைந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது பேசுகையில், இந்த கோர சம்பவம் குறித்து தனது மனவருத்தத்தை தெரிவித்திருந்தார் அவர்

அப்போது ”சில ஆண்டுகளுக்கு முன் தங்கள் உரிமைக்காக போராடிய தமிழர்களை, பக்கத்து நாடான இலங்கை அரசு கொன்று குவித்தது. பக்கத்து நாடு என்பதால் அப்போது நம்மால்  எதுவும் செய்ய முடியவில்லை.”

இப்போது நம்மண்ணிலேயே  நமது தமிழ் மக்கள்  சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்கள் என்ன சாதிச்சண்டை, மதச்சண்டை என்று நாட்டிற்கு விரோதமாகவா போராடினார்கள் ? சுவாசிக்க நல்ல காற்று வேண்டும் என்று தானே போராடினார்கள். இருபது வருடங்களாக நல்ல மூச்சுக்காற்றை சுவாசிக்க போராடிய மக்களின் மூச்சுக்காற்றை நிறுத்தியது, மிகப்பெரிய கொடுமை என வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார் நடிகர் சூரி.