ஆர்.பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு முதலுக்கு மோசமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் பார்த்திபன். இந்நிலையில் தனது அடுத்த படம் பற்றி பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 

அதில், ‘’வணக்கம்! அடுத்தது பற்றி நிறைய ஓடுகிறது மனதில், அதில் ஒரு ஸ்கிரிப்டுக்கு Fitness freak -ஆன 25 வயது பெண் (சிரித்தால்... சில பசங்களையாவது சீரியஸாக்கி  Icu- க்கு அனுப்பக்கூடிய) நடித்து அனுபவமுள்ளவர் தேவை’’என அறிவித்து இருந்தார். இவரது ட்விட்டருக்கு காமெடி நடிகர் பெண் வேடமிட்ட தனது படத்தை பதிவு செய்து என்ன சார் ஓ.கேவா..?  கேள்வி எழுப்பியிருந்தார். இந்த போட்டோவை எதிர்பார்க்காத பார்த்திபன் அதிர்ச்சியாகி விட்டார். 

’’இவ்வளவு அழகை வைச்சி என்ன செய்றது ? சதீ(டீ)ஷ்கர் பொண்ணு மாதிரி இருக்கு! தலைகானில பஞ்சு இருந்தா தூங்கலாம், தங்கம் இருந்தா ?’’ என பதில் ட்விட் போட்டு கலகலப்பாக்கி இருக்கிறார். இருவரில் நைய்யாண்டி, பஞ்ச் பதில்களை பாராட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள். 

 

உங்க ரைமிக் பஞ்ச் இருக்கே அது நையாண்டி கே உரிய ஸ்டைல்.. அது உங்களை தவிர யாருக்கும் வராது.. என பாராட்டி வருகின்றனர்.